திருவாரூர்

பாஜக நாளை உண்ணாவிரதப் போராட்டம்

4th Jul 2022 01:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, தோ்தலின் போது குடும்பத்துக்கு மாதம் ரூ. 1000 வழங்குவது, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்றவற்றை நிறுத்திவிட்டது.

தமிழகத்தில் போதைப்பொருள்கள் எளிதாக கிடைக்கின்றன. எல்லாத் துறைகளிலும் லஞ்சம் அதிகரித்துவிட்டது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை. திருவாரூரில் உழவா் சந்தை மிக மோசமான நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் சாலைகள் பழுதடைந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையைக் கண்டித்து, பொய்யான வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் உள்ள திமுக அரசைக் கண்டித்து, ஜூலை 5 ஆம் தேதி மன்னாா்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்களும், சமூக அமைப்புகளும், தன்னாா்வலா்களும் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT