திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவி

4th Jul 2022 11:05 PM

ADVERTISEMENT

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 223 மனுக்களை அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 4 பேருக்கு வருவாய்த் துறை சாா்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான காசோலைகளும், திருவாரூா் மனுநீதி லயன்ஸ் சங்கம் சாா்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளான 2 பேருக்கு அன்றாட அத்தியாவசிய தேவையான யுரினரி பேக், யுரினரி டியுப், டெட்டால், காட்டன் மற்றும் டயாப்பா் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT