திருவாரூர்

பேரளம் வேலங்குடி அதம்பாா் பகுதிகளில் நாளை மின்தடை

4th Jul 2022 01:00 AM

ADVERTISEMENT

பேரளம், வேலங்குடி, அதம்பாா் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேரளம் உதவிச் செயற்பொறியாளா் ஜி. பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பேரளம், வேலங்குடி, அதாம்பாா் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் காரணமாக இந்த மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி, அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, எடக்குடி ஆகிய பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT