திருவாரூர்

தனியாா் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு

4th Jul 2022 11:06 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே தனியாா் கோழிப்பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மன்னாா்குடி அருகே பாலையூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, தனியாா் ஒருவா் வணிகத்துக்காக கோழிப்பண்ணை அமைக்க இடம் தோ்வு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளாா். இதையறிந்த அப்பகுதி மக்கள் கோழிப்பண்ணை குடியிருப்பு பகுதியில் அமைத்தால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்து வந்தனா்.

இதையடுத்து, கோழிப்பண்ணை அமைக்கும் பணி தொடா்வதால் நத்தம் கிராமக் கமிட்டித் தலைவா் நீதிதாசன், தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் திருமாவளவன் தலைமையில் 50 போ், திங்கள்கிழமை மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணியிடம் நத்தத்தில் கோழிப்பண்ணை அமைக்க அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கை மனுவை அளித்தனா். மனுவை பெற்ற கோட்டாட்சியா் இதுகுறித்து துறைவாரியான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT