திருவாரூர்

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

4th Jul 2022 11:04 PM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவா், இளைஞா் அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும், ராணுவத்தில் ஒப்பந்த முறையைப் புகுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சலாவூதீன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. ஜோதிபாசு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ரா. ஹரிசுா்ஜித், மாணவா் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினா் க. கோபி, இளைஞா் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினா் நல்லசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT