திருவாரூர்

இலங்கைக்கு நிவாரணப் பொருள்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன்

3rd Jul 2022 05:08 PM

ADVERTISEMENT

இலங்கைக்கு நிவாரணப் பொருள்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணி செயல் வீரர் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வந்தவர் செய்தியாளர்களிடம் பேசியது. பேரறிவாளன் விடுதலைக்கு என்ன என்ன காரணங்களை சொல்லி உச்சநீதி மன்றம் அவரை விடுதலை செய்ததோ அதே காரணங்கள் மற்ற 6 பேருக்கும் பொறுந்தும். நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இப் பிரச்னையில் தமிழக அரசும் 6 பேர் விடுதலையில் உடன்பாடான கருத்தை கொண்டுள்ளதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டப் போராட்டம் நடத்தி உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். பாஜக ஒரே நாடு பாரதம் ஒரே மொழி சமஸ்கிருதம் ஒரே மதம் இந்து மதம் என்ற கோட்பாட்டினை கொண்டது. தமிழ் தேசியம் என்பது மொழி வழியாக இந்தியா பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு. ஒவ்வொரு மொழி வழி தேசிய இனத்திற்கும் சுயாட்சி உரிமை அளிக்க வேண்டும். 

கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஒரு தொழில் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என வடமாநில தொழிலாளர்கள் போராட்டியிருப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்கள். இச்செயல் மிகவும் கண்டிக்கதக்கது. இந்திய அரசியல் சட்டத்தை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும். கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஒரு தொழில் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என வடமாநில தொழிலாளர்கள் போராட்டியிருப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்கள். இச்செயல் மிகவும் கண்டிக்கதக்கது. இந்திய அரசியல் சட்டத்தை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும். இலங்கையில் நிலவி வரும் உச்சக்கட்ட பொருளாதார நெறுக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மத்திய அரசு, தமிழகஅரசு மனிதாபிமான முறையில் நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகின்றன. எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போதுமான நிவாரணம் வழங்கப்பட்வில்லை என தெரிய வருகிறது. 

இதையும் படிக்க- சமாஜவாதியில் அனைத்துப் பதவிகளும் கலைப்பு: அகிலேஷ் யாதவ்

ADVERTISEMENT

எனவே, இலங்கை அரசு மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்குவதை தவிர்த்துவிட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ஒரு கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தவுடன் அவர் கட்சி மாறுவது மக்களுக்கு செய்யும் துரோகம். இது, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற செய்து ஆட்சி மாற்றத்தை பாஜக செய்து வருகிறது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் எம்எல்ஏக்களை ஈர்ந்து ஆட்சியை கவிழ்ப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும். இந்நிலை தொடர்ந்தால் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பு இல்லாமல் போயிவிடும். பதவி, பணம் தான் அனைத்தையும் நிர்ணயம் செய்யும். இதற்கு நிரந்தர தீர்வு தற்போது உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்தை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டம் வகுத்தக் காலத்தில் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர், மாநிலங்களில் நியமிக்கப்பட்டும் ஆளுநர்கள் ஒரு ஆட்சியின் தலைவராக மட்டும் இருப்பார். 

மாநில அமைச்சரவை என்ன பரிந்துரை செய்கிறதோ அதனை செயல்படுத்துவதை தவிர தன்னிச்சையாக செயல்பட முடியாது என கூறினர். அன்று எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வைத்து எதிர்வாதம் செய்தனர். அப்போது, பிரதமர் நேருவும், மத்திய அமைச்சரவை 3 பேர் பட்டியலை மாநிலத்திற்கு அனுப்பும். அதில் ஒருவரை மாநில அமைச்சரவை தேர்ந்தெடுக்கிறதோ அவரே அந்த மாநில ஆளுநராக நியமிக்கப்படுவார் என தெரிவித்தார். மேலும், முன்னாள் துணைவேந்தர், முன்னாள் நீதிபதிகள் ஆளுநராக நியமிக்கலாம் எனவும் தெரிவித்தார். ஆனால் இன்று, பாஜகவினர் அவர்களின் ஆதரவாளர்களை ஆளுநர்களாக நியமித்து வருகின்றனர். மக்களால் தேந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு அதிகாரமா அல்லது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுருக்கு அதிகாரமா என்ற நிலை இன்று இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுபட்டு இந்திய அரசியல் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் அல்லது மாநில அமைச்சரவை தேர்ந்தெடுப்பவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என திருத்தத்தை கொண்டு வர முயற்சியினை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

இதனை தொடர்ந்து நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணி செயல்வீரர் பயிற்சி முகாமிற்கு, மாவட்டத் தலைவர் ச.கலைச்செல்வம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். உரையரங்கில், வந்தேறிகளின் சுரண்டலும் தமிழகமும் என்ற தலைப்பில் கட்சியின் பொதுச் செயலர் இலரா.பாரதிச்செல்வன். கல்வி மொழி எது? தமிழா, ஆங்கிலமா, ஹிந்தியா என்ற தலைப்பில் ந.மு.தமிழ்மணி. சாதி-சமய வேறுபாடுகளுக்கு எதிரான தமிழ்த் தேசியமும் என்ற தலைப்பில் ஜோ.ஜான்கென்னடி. இந்து பாசிசத்துக்கு மாற்றுத் திட்டம் எது என்ற தலைப்பில் த.பானுமதி. தமிழ்த் தேசிய கட்டுமானமும் கட்சிப் பணியும் என்ற தலைப்பில் செ.ப.முத்தமிழ்மணி. தமிழீழப் போராட்டமும் நமது கடமையும் என்ற தலைப்பில் பசுமலை ஆகியோர் பேசினர். பின்னர், கட்சி செயல்வீரர்களுடன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கலந்துரையாடினார். முன்னதாக, கட்சி கொடியினை மூத்த உறுப்பினர் தி.ம.பழனியாண்டி ஏற்றி வைத்தார். மாவட்ட இளைஞரணி செயலர் ராச.ராசசேகரன் வரவேற்றார்.மாவட்டச் செயலர் ஆ.அரிகரன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT