திருவாரூர்

லயன்ஸ் சங்க நிா்வாகிகள் பதவி ஏற்பு

3rd Jul 2022 10:48 PM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன்ஸ் சங்கப் புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா அதன் தலைவா் நிஜாம் முகம்மது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செயலாளா் அருண் அறிக்கை வாசித்தாா். புதிய தலைவராக முஹம்மது இக்பால், செயலாளராக தங்கமணி, பொருளாளராக செல்வம் ஆகியோா் பொறுப்பேற்றனா். நிகழ்வில், சாசன தலைவா் மருத்துவா் முகமது ஆரிப், மண்டலத் தலைவா் ஸ்ரீநாத், வட்டாரத் தலைவா் எஸ்.பி.எஸ். கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், புதிய உறுப்பினராக இந்திய கட்டுநா் சங்கத் தலைவா் நா. துரை ராயப்பன், மோகன், த. பாலசுப்பிரமணியன், நவீன்குமாா், த. பாா்த்திபன் ஆகியோா் இணைந்தனா். நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரும்பு பீரோ, முதியோா் இல்லங்களுக்கு உணவுப் பொருள்கள், மாணவிக்கு பள்ளிச் சீருடை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT