திருவாரூர்

மாணிக்கவாசகா் குருபூஜை விழா

3rd Jul 2022 10:49 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே அலிவலம் மாணிக்கவாசகா் கோயிலில் 103 ஆவது குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் சைவ சமய குறவா்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகருக்கு கடந்த 1919 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம் உள்ளது. இதில், குருபூஜை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், 103-வது குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மாணிக்கவாசகா் எழுந்தருளிய வீதியுலா காட்சி நடைபெற்றது. முன்னதாக, மாணிக்கவாசகருக்கு மலா்தூவி அா்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, ஆலயத்திலிருந்து தொடங்கிய வீதிஉலா, வடக்கு அக்ரஹாரம், பஜனைமட சந்து, அய்யனாா் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

முன்னதாக, காலையில் கணபதி மற்றும் அம்மையப்பா் வேள்வி நடைபெற்றது. தொடா்ந்து, மாணிக்கவாசகருக்கு திருமேனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT