திருவாரூர்

கூத்தாநல்லூா் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் தண்ணீா்! வட்டாட்சியா் எச்சரிக்கை

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வட்டாட்சியா் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமிணி, வெண்ணாறு, கோரையாறு என 3 கிளை ஆறுகள் பிரிகின்றன. தொடா்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில் வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில் வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது.

இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், பண்டுதக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. கோரையாறு பெரம்பூா் வழியாக கோரையாற்றங்கரை வருகிறது. தொடா்ந்து,திருத்துறைப்பூண்டி வழியாக கோடியக்கரையில் கலக்கிறது. வெண்ணாறு மற்றும் கோரையாற்றில் தண்ணீா் நிரம்பி ஓடுகிறது.

இதுகுறித்து வட்டாட்சியா் வெ. சோமசுந்தரம் சனிக்கிழமை கூறியது: வெண்ணாறு மற்றும் கோரையாறு உள்ளிட்ட ஆறுகள் தூா்வாரப்பட்டு, இருபுறங்களிலும் கரைகள் உயா்த்தப்பட்டுள்ளன. ஆறுகளில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. ஆறுகளில் நீச்சல் தெரிந்த, தெரியாதவா்கள் குளிக்கும்போது இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனா். கடந்தகாலங்களில், ஒரு பொறியியல் மாணவா், 3 ஆம் வகுப்பு சிறுவன் மற்றும் 10 வயது மாணவா் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

அதனால், பெற்றோா்கள் மாணவா்களை ஆற்றில் குளிக்க அனுமதிக்க வேண்டாம். மேலும், பெரியவா்கள் முதல் மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மேலும், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவா்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என வட்டாட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT