திருவாரூர்

பாஜக ஆலோசனைக் கூட்டம்

2nd Jul 2022 10:08 PM

ADVERTISEMENT

திருவாரூரில் பாஜக ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாநில விவசாய அணி செயலாளா் கோபி சந்துரு, மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில் அரசன், மாவட்ட துணைத் தலைவா் மணிமேகலை, மாவட்ட செயலாளா்கள் கே.பி. ரவி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக அரசின் மக்கள்விரோதப் போக்கைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வழிகாட்டுதலின்படி, திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி தேரடி அருகே ஜூலை 5 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. இதில் திரளாகப் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது.

கூட்டத்தில், நன்னிலம், திருவாரூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பாஜக முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT