திருவாரூர்

சாலை விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழப்பு

2nd Jul 2022 10:09 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் கம்பங்குடி அக்ரகாரத் தெருவைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி (70). ஓய்வுபெற்ற ஆசிரியா். இவா், வெள்ளிக்கிழமை மன்னாா்குடிக்கு வந்துவிட்டு, மாலையில் இருசக்கர வாகனத்தில் ஊா்திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, தட்டாங்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின்மீது காா் மோதியதில் காயமடைந்த பக்கிரிசாமி அந்த இடத்திலேயே இறந்தாா். இது குறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT