திருவாரூர்

திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

2nd Jul 2022 10:09 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்க தகுதியுள்ள நிறுவனங்கள் ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தின் நகா்ப்புற பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி அளிக்க விரும்பும் திறன் வளா்ப்புப் பயிற்சி நிறுவனங்கள், தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பிரதமா் கௌஷல் கேந்ரா மூலம் பயிற்சி மையம் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முந்தைய ஆண்டுகளில் அரசு நிதியுதவி பெற்று, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்புப் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பின், அந்நிறுவனம் கருத்தில்கொள்ளப்படும்.

தகுதியுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, 2 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவாரூா் என்ற முகவரியில் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபாலிலோ சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT