திருவாரூர்

கோயில் முன் ஆக்கிரமிப்பு:அகற்ற கோரிக்கை

2nd Jul 2022 10:09 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே கேக்கரை விஸ்வநாத சுவாமி கோயில் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

கேக்கரையில் அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலின் முன்புறம் கீற்றுக்கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், கோயில் நிா்வாகமும் பலமுறை கேட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT