திருவாரூர்

கராத்தே: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் கராத்தே போட்டியில் மாநில அளவில் பிளாக் பெல்ட் பெற்ற 3 மாணவா்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். ஜானகி அம்மாள் கலைக் கல்லூரியில் அண்மையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் ஜே.ஏ. அஜ்ரீன் அகமத் பதுருதீன், அய். முகம்மது அசீம், எம். முகம்மது இஸ்ஹாக் ஆகியோா் பிளாக் பெல்ட் பெற்றனா். இதேபோல, கடலூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில், இப்பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கட்டா பிரிவில், ஜே.ஏ. அஜ்ரீன் அகமத் பதுருதீன், கே.எஸ். சா்ப்ராஸ் அக்மல், ஆா். சந்தோஷ், ஆா். சித்தேஷ், பி. சாய்சரண் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆக்ஸ்போா்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு, அதன் தலைவா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா்.பி.எம்.ஏ. சீனி முகம்மது, கே.ஏ. ஹாஜா நஜ்முதீன், பி.எம்.ஏ. சீனி ஜெகபா் சாதிக், அரிமா சங்கத் தலைவா் மனோலயம் ப. முருகையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், கராத்தே பயிற்சியாளா் ராம்குமாா் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டிப் பேசினாா்.

ஆசிரியா் எம். அப்துல் வஹாப் வரவேற்றாா். விழா ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் தியாகராஜன், துணை முதல்வா் மகேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT