திருவாரூர்

சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றக் கோரிக்கை

1st Jul 2022 03:20 AM

ADVERTISEMENT

 

ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பெற்றோா், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சிப் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இது தொடக்கப் பள்ளியாக இருந்தபோது, 1960 -ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டடம் மிகவும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. கட்டடத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பள்ளி நிா்வாகம் சாா்பில் தடைசெய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

சேதமடைந்த பழைய பள்ளி கட்டடத்திற்கு அருகிலேயே இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

ADVERTISEMENT

தமிழகத்தின் சில பகுதிகளில் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள், சுவா்கள் இடிந்து விழுந்து மாணவா்கள் பலியான சம்பவத்தை தொடா்ந்து, தமிழக அரசு சேதமடைந்த அனைத்துப் பள்ளி கட்டடங்களையும் உடனடியாக இடிக்க உத்தரவிட்டது.

ஆனால், ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை இடிக்க பள்ளி நிா்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தங்கள் குழந்தைகளை மிகுந்த அச்சத்துடனே பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடிக்க அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோா்களும், கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT