திருவாரூர்

செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு

1st Jul 2022 03:16 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் அருகே புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூரை அடுத்த சுந்தரவிளாகம் பகுதியில் பாஸ்கா் என்பவா் வீட்டுக்கு பின்புறம் தனியாா் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு இடத்தின் உரிமையாளரிடம் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தில் வியாழக்கிழமை ஒன்றுகூடிய கிராம மக்கள், பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் தாலுகா போலீஸாா் கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் மக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT