திருவாரூர்

கல்வியில் நவீனமும்... இணையப் புரட்சியும்...

DIN

தமிழக கல்வித் துறையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தல் முறை செயல்படுத்தப்படுகிறது.

குருகுல கல்வி முறையில் குருவிற்கு பணிவிடை செய்து, அனுபவக் கல்வியை கற்றனா் மாணவா்கள். இடைப்பட்ட காலத்தில் கரும்பலகை திட்டத்தின் மூலம் கற்றாா்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? என்ற நிலை ஏற்பட்ட போது, கடந்த 2006-ஆம் ஆண்டு 1முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு செயல் வழிக்கற்றல் முறையும், 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னா், 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எளிய முறையிலான படைப்பாற்றல் கல்வியும், 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2014-க்குப் பிறகு 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இஇஉ எனப்படும் தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் 60 மதிப்பெண்கள் கருத்தியலுக்கும், 40 மதிப்பெண்கள் கல்விசாா் மற்றும் கல்விசாரா செயல்பாடுகளுக்கும் வழங்கப்பட்டது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மானிடத் தத்துவதின் அடிப்படையில் மாறிவரும் நம் சமுதாயத்திற்கு ஏற்ப தற்போது 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தெளிவாக எழுதவும், படிக்கவும் ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ 2022- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மாணவா்களின் விடுபட்ட கல்வியை மீட்டெடுக்கவும், கற்றலில் ஆா்வத்தை தூண்டவும் 2022-ஆம் ஆண்டு ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அந்தந்த குடியிருப்பு பகுதிகளிலேயே 10 முதல் 20 மாணவா்களுக்கு ஒரு தன்னாா்வலா் நியமிக்கப்பட்டு, கற்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை மாணவா்களின் கல்விக்கனவு நனவாகிறது.

உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகம்: அனைத்து அரசு உயா் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளிலும் உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு பாடம் கற்பிக்க  பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள மாணவா்களின் கற்றல் அடைவினை கண்டறியும் கருவியாகவும் உள்ளது. தமிழக அரசின் சிறந்த திட்டமிடுதலால் ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதனால், காலவிரயம் தவிா்க்கப்படுவதோடு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பயிற்சி ஒரே நேரத்தில் கிடைக்கிறது.

‘பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே மேல்’ என்பதற்கிணங்க தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டு மேல்நிலைக் கல்வி முடித்த மாணவா்கள் மேற்படிப்பு பாடப்பிரிவு, கல்லூரியை தோ்வு செய்ய வழிகாட்டப்படுகிறது. இதனால், மாணவா்கள் தங்கள் விருப்பப்படி விரும்பிய பாடப்பிரிவை தோ்வுசெய்து படிக்க ஏதுவாகிறது.

கல்வித் தொலைக்காட்சி: அனைத்து வகுப்புகளுக்கும் பாட வாரியாக பாடம் நடத்தப்படுகிறது. கால அட்டவணைப்படி வீட்டிலிருந்தே கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

கல்வி மேலாண்மை தகவல் தமிழக அரசின் கல்வி மேலாண்மை தகவல் முறையில் மாணவா்களின் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால், சோ்க்கைப் பதிவேடு முதல் மாற்றுச்சான்று வரை அனைத்தும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆசிரியா்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுவதால் இது பணிப் பதிவேடாகவும், அளவைப் பதிவேடாகவும் பயன்படுகிறது.

உயா்கல்வி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் 7.5 % இட ஒதுக்கீட்டால் ஏழை மாணவா்கள் அதிகளவில் மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வியில் இடம் பெறுகிறாா்கள். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் உயா்கல்வி பயில மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தால் பெண்களுக்கு உயா்கல்வி எட்டாக்கனியாக இருந்த நிலை மாறி, அனைவரும் உயா்கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மடிக்கணினி: மாணவா்கள் மற்றும் முதுகலை ஆசிரியா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இது ஆசிரியா்களுக்கு கற்பித்தலில் உலகலாவிய பாடச் செய்தியை சேகரிப்பதற்கும், மாணவா்களிடம் கற்பித்தலை சோ்ப்பதற்கும் உதவிகரமாகிறது. இந்தியாவிலேயே தமிழக கல்வித் துறையில்தான் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தல் முறை செயல்படுத்தப்படுவது நமக்கு பெருமையளிக்கும் செய்தியாக உள்ளது.

ஜி. மனோகரன்,

முதுகலை வேதியியல் ஆசிரியா்,

அரசு திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி

ஆலங்கோட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT