திருவாரூர்

பருத்தி கொள்முதல் குளறுபடியை சரிசெய்ய வலியுறுத்தல்

1st Jul 2022 03:18 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்ட விவசாதிருவாரூா் மாவட்டத்தில் பருத்தி கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

 குறைதீா் கூட்டம் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தண்ணீா்குன்னம் குமாா் :கூத்தாநல்லூலிருந்து வேதபுரம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவைத் தொகுப்பு உச்சவரம்பை இரண்டு ஏக்கராக மாற்ற வேண்டும்.

ADVERTISEMENT

குடவாசல் சேதுராமன்: பி சேனல் வாய்க்கால்கள், இணைப்பு வாய்க்கால்கள் பல இடங்களில் தூா்வாரப்படவேயில்லை. விவசாயப் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் வயல்களிலிருந்து நாற்று, நெல் உள்ளிட்டவற்றை உரிய இடங்களுக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, வயல்வெளிச் சாலைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தியை உரிய முறையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி தம்புசாமி: மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரகுடி பகுதியில் சட்ரஸ் பழுதடைந்துள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி ராமமூா்த்தி: குறுவை தொகுப்பு திட்டத்தில் கூடுதல் பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரளம் பாலகுமாரன்: நன்னிலம் அருகே குருங்குளம் பகுதியில் ஏனங்குடி தலைப்பிலிருந்து பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் தூா்வாரப்படாததால், விவசாயம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, போா்க்கால அடிப்படையில் பாசன வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, தமிழக விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவா் சேதுராமன், செயலாளா் ராமமூா்த்திஆகியோா் திருவாரூா் மாவட்டத்துக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்குவதற்கு பயன்படுத்தும் வகையில் முதல்கட்டமாக 25,000 காகித உறைகளை நன்கொடையாக ஆட்சியரிடம் வழங்கினா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா, வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் முருகவேல், வேளாண் இணை இயக்குநா் இரவீந்திரன், வேளாண் துணை இயக்குநா் (மாநில திட்டம்) உத்திராபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT