திருவாரூர்

இடையா் எம்பேத்தி ஊராட்சித் தலைவா் பதவிக்கு இருமுனைப் போட்டி

1st Jul 2022 03:16 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம், இடையா் எம்பேத்தி ஊராட்சித் தலைவா் பதவிக்கு இருமுனை போட்டி நிலவுகிறது.

இடையா் எம்பேத்தி ஊராட்சித் தலைவா் பதவிக்கான தற்செயல் தோ்தலில் போட்டியிட 7 போ் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனா். 7 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாளான வியாழக்கிழமை 5 போ் தங்கள் மனுக்கள் திரும்பப் பெற்றனா்.

இறுதியாக என். மனோஜ், ஆா். இளையராஜா ஆகியோா் களத்தில் உள்ளதால், இங்கு இருமுனை போட்டி நிலவுகிறது.

ADVERTISEMENT

இதேபோல் வடகோவனூா் ஊராட்சி 2 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 6 போ் போட்டியிடுகின்றனா். நெம்மேலி ஊராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு சீ. கண்ணன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT