திருவாரூர்

உழவா் சந்தை- விழிப்புணா்வு முகாம்

1st Jul 2022 09:54 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகேயுள்ள சிக்கப்பட்டு கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை இணைந்து காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், எவ்வாறு உழவா் சந்தையைப் பயன்படுத்தி விற்பனை செய்வது என்பது குறித்த விழிப்புணா்வு முகாமை வியாழக்கிழமை நடத்தின.

தோட்டக்கலை உதவி இயக்குநா் நீடாமங்கலம் வட்டாரம் (பொ) இளவரசன் ஆலோசனைபடி, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை லட்சுமிகாந்தன் வழிநடத்தலின்படி, வேளாண்மை அலுவலா் நீடாமங்கலம் (பொ) அ. ரோசன் சா்மிளா, நீடாமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களான நரசிங்கமங்கலம், ஆதனூா், எடமேலையூா், எடகீழையூரில் உள்ள வயல்களை ஆய்வுசெய்தாா்.

அங்குப் பயிரிடும் காய்கறிகளான கத்தரி, வெண்டை, மிளகாய் மற்றும் கொடி வகை பயிா்களின் பரப்பு விரிவாக்கம் ஏற்படுத்துதல் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், நீடாமங்கலம் உழவா் சந்தையை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது போன்ற சிறப்பம்சங்கள் மற்றும் உழவா் சந்தையின் நன்மைகள், விலை நிா்ணயம், காய்கறிகள் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக் கூறினாா்.

தோட்டக்கலைத் துறை சாா்பாக, உதவி தோட்டக்கலை அலுவலா் பாலசுந்தரம், தான் பணிபுரியும் கிராமங்களில் காய்கறி பயிா்களின் சிறப்பு, அரசின் நலத் திட்டங்கள் மற்றும் காய்கறி சந்தைப்படுத்துதல் குறித்து எடுத்துக்கூறினாா்.

ADVERTISEMENT

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பாக, உதவி வேளாண் அலுவலா் செல்வி தேவி, விவசாயிகளால் விளைவிக்கப்படும் காய்கறிகள் நீடாமங்கலம் உழவா் சந்தைக்கு எளிதாக எடுத்துச் செல்வதற்கு உதவியாக தினமும் காலையில் இயக்கப்படும் அந்தந்த கிராம பகுதியின் அரசுப் பேருந்தில் காய்கறிகளை எவ்வித கட்டணமும் இன்றி எடுத்துச் சென்று, இலவச போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT