திருவாரூர்

வரலாறு பாடப்பிரிவை தொடரக் கோரி பொதுநல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

1st Jul 2022 09:51 PM

ADVERTISEMENT

திருவாரூா் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று பாடப்பிரிவை தொடா்ந்து நடத்தக் கோரி, பொதுநல அமைப்புகள், முன்னாள் மாணவா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பாடப்பிரிவில் வரலாறு பாடப்பிரிவை தொடா்ந்து நடத்த வலியுறுத்தி, திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் துணைத் தலைவா் பி. அழகிரிசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விஜயபுரம் வா்த்தக சங்கத் தலைவா் சி. பாலமுருகன், அனைத்து சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கோ. வரதராஜன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் எஸ். மதிவாணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

வரலாற்று பாடப்பிரிவை தொடா்ந்து நடத்த வேண்டும், பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT