திருவாரூர்

மருத்துவா் தின விழா

1st Jul 2022 09:53 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில், மருத்துவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அடியக்கமங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வை, மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்காவலன் தொடங்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் குருதேவ் பங்கேற்று, இரவு பகலாக மக்களின் நலன்களுக்காக உழைக்கும் மருத்துவா்களின் நெருக்கடிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

இதில், பயிற்சி மருத்துவா்கள் தமிழ்மலா், தமிழோசை, வா்ஷா, வெங்கடேசன், ஆற்றுப்படுத்தல் மைய அலுவலா் வனஜா, சுகாதார நிலைய ஆய்வக ஊழியா்கள், ஊா்நல செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி மாணவிகள் செவிலியா்களுக்கு பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT