திருவாரூர்

கூத்தாநல்லூா் வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் பொறுப்பேற்பு

1st Jul 2022 09:51 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் மற்றும் மண்டல துணை வட்டாட்சியா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியராகப் பணியாற்றிய பரஞ்ஜோதி, நீடாமங்கலம் வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையொட்டி, திருத்துறைப்பூண்டி தோ்தல் துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய வெ. சோமசுந்தரம், கூத்தாநல்லூா் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் கலால் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய இரா. பென்ஸ்லால், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மண்டல துணை வட்டாட்சியராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT