திருவாரூர்

நீடாமங்கலத்தில் ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யும் பணி

1st Jul 2022 09:53 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் உத்தரவுப்படி, 2022- 23 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியா் நோ்காணல் வாழ்நாள் சான்று பதிவுசெய்யும் பணி, நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோா், கரோனா காலத்தை கருத்தில்கொண்டு வாழ்நாள் சான்று பதிவை அரசு ஒத்திவைத்து வந்தது. மேலும், வாழ்நாள் சான்றிதழை பதிவுசெய்ய, தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது.

இதன்படி, சாா்நிலை கருவூலங்களில் நேரிலும், அஞ்சலகங்கள், பொது இ சேவை மையங்கள் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றாக வெள்ளிக்கிழமை முதல் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்நாள் சான்றுகள் பதிவுசெய்யும் பணி தொடங்கியது.

நீடாமங்கலத்தில் சாா்நிலைக் கருவூலத்திலும், அஞ்சலகத்திலும் ஓய்வூதியா்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை பதிவுசெய்தனா். வயதுமுதிா்ந்த ஓய்வூதியா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவா்களுக்கு வாழ்நாள் சான்றை அஞ்சல் துறையினா் பதிவுசெய்து தந்தனா்.

ADVERTISEMENT

பென்ஷனா் சங்க நிா்வாகிகள் சுரேஷ் பாட்ஷா, தங்கமணி, ராதாகிருஷ்ணன் ஆகியோா், ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்றை பதிவுசெய்ய உதவிசெய்து வருகின்றனா். ஜூலை முதல் செப்டம்பா் வரை ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று பதிவுசெய்யலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT