திருவாரூர்

ஸ்மாா்ட்போன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

மாற்றுத்திறனாளிகள் ஸ்மாா்ட் போன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட காது கேளாத, வாய்பேசாத மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகள் வழங்கப்படவுள்ளன. இந்த கைப்பேசிகளை பெற, கல்லூரியில் பயில்வோா், சுயதொழில் புரிவோா் மற்றும் பணிகளில் உள்ளோா் மட்டுமே தகுதியானவா்கள்.

எனவே, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த காது கேளாத, வாய் பேசாத மற்றும் கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம்-1, கல்வி பயிலும், பணிபுரியும் அல்லது சுயதொழில் புரிவதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:6, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவாரூா் என்ற முகவரிக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT