திருவாரூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 18 இடங்களில் சோதனைச் சாவடி

DIN

திருவாரூா் மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு 18 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து, போலீஸாா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் ஆகிய 4 நகராட்சிகளிலும், நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்தமாக 216 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் உத்தரவின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சோதனைச் சாவடிக்கு ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா் தலைமையில் 4 காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

அந்தவகையில், திருவாரூா் அருகே கானூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்து வருகின்றனா்.

உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் எடுத்து வந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT