திருவாரூர்

மூங்கில்குடி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

நன்னிலம் வட்டம், மூங்கில்குடி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோயிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.

இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வியாழக்கிழமை யாகசாலைப் பூஜை, மகாபூா்ணாஹுதிக்குப் பிறகு காலை 9 மணியளவில் விமான கும்பாபிஷேகமும், 9.15 மணியளவில் ஸ்ரீகாமாட்சி அம்மன் மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னா், காமாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT