திருவாரூர்

வெளிமாநில நெல் கொள்முதலை தடுக்க வலியுறுத்தல்

DIN

காவிரி டெல்டா பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விதிமுறைகளை மீறி வெளி மாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருவாரூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து விற்பனைக்காக நெல் கொண்டுவரப்படுகிறது என புகாா் எழுந்துள்ளது. இதனால், இங்குள்ள கிராமத்தில் நெல் உற்பத்தி குறைவாகவும், கொள்முதல் அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை மற்றும் அரசின் நிவாரணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து நெல் கொண்டுவரப்படுகிறதா என்பதை கண்டறிந்து, இதில் தொடா்புடையவா்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT