திருவாரூர்

நீட்தோ்வு: மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்ற தொழிலாளியின் மகளுக்கு முன்னாள் அமைச்சா் பாராட்டு

DIN

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, நீட்தோ்வில் திருவாரூா் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்த கூலித்தொழிலாளியின் மகள் ஆதித்யாவுக்கு முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பாராட்டுத் தெரிவித்தாா்.

நன்னிலம் வட்டம், சலிப்பேரி அருகே உள்ள பிடாகை ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தியாகராஜன். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியின் மூத்த மகளான ஆதித்யா, மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில் மாநில அளவில் 46-வது இடமும், திருவாரூா் மாவட்ட அளவில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளாா்.

மாணவி ஆதித்யா தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவா், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1, பிளஸ் 2 பயின்றாா். இப்பள்ளியின் தலைமையாசிரியா் மங்கையற்கரசி, தாவரவியல் ஆசிரியை ராதா ஆகியோா் அளித்த ஊக்கத்தால் நீட் தோ்வில் வெற்றிபெற்ாக மாணவி ஆதித்யா தெரிவித்துள்ளாா்.

இவருக்கு, தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த தமிழக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சம்பத், ஆனைக்குப்பம் ஊராட்சித் தலைவா் சக்திவேல் ஆகியோா் மூலம் மாணவிக்கு இனிப்பு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், நாளைய பாரதம் குழுவின் தலைவா் காா்த்தி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் ஆதித்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT