திருவாரூர்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை

DIN

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள், செவ்வாய்க்கிழமையில் விசாரணை நடத்தினா்.

திருவாரூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில் கடந்த அக்டோபா் மாதம் 29-ம் தேதி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் வராத ரூ. 47,500 கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா். ஆனால், இதுதொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் சித்ரா உள்ளிட்டோா் திங்கள்கிழமை (ஜன.24), செவ்வாய்க்கிழமையில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா், கடைநிலை ஊழியா்கள், குறிப்பிட்ட ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கேட்டபோது, இந்த விசாரணை வழக்கமான நடைமுறைதான் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

SCROLL FOR NEXT