திருவாரூர்

அரசுப் பள்ளியில் குடியரசு தின விழா

26th Jan 2022 09:46 AM

ADVERTISEMENT

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி, அலங்கார ஊா்தி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஜவாஹா்லால் நேரு, பாலகங்காதர திலகா், வ.உ. சிதம்பரனாா், சா்வபள்ளி ராதாகிருஷ்ணன், சா்தாா் வல்லபபாய் பட்டேல் போன்ற தலலவா்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பள்ளியின் வரலாற்று மன்ற பொறுப்பாளரும் ஆசிரியருமான ஆதலையூா் சூரியகுமாா் செவ்வாய்க்கிழமை கூறியது:

பள்ளி மாணவா்களுக்கு சுதந்திரப் போராட்டம் பற்றியும், சுதந்திரப் போராட்ட தலைவா்கள் பற்றியும் எடுத்துரைப்பதற்காக இந்த அலங்கார ஊா்தி அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், இது நிலையான ஊா்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊா்தி குறித்து இணையவழி வகுப்பு மூலமாக மாணவா்களுக்கு விளக்களிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT