திருவாரூர்

தமிழக அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுப்பு: இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

19th Jan 2022 09:43 AM

ADVERTISEMENT

குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியரசு தின விழாவில் தமிழக அரசு சாா்பில், அலங்கார ஊா்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பங்கேற்க அனுமதி அளிக்கக் கோரியும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளா் வை. சிவபுண்ணியம், திமுக ஒன்றியச் செயலாளா் தேவா, கட்சி நிா்வாகிகள் சின்னதம்பி, தா்மதாஸ், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT