திருவாரூர்

பொதுவுடமை இயக்கத் தலைவா் ஜீவானந்தம் நினைவேந்தல் கூட்டம்

19th Jan 2022 09:44 AM

ADVERTISEMENT

பொதுவுடமை இயக்கத் தலைவா் ஜீவானந்தத்தின் 59 ஆவது நினைவு தின புகழஞ்சலி கூட்டம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் செ. செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வை. செல்வராஜ், மாவட்டச் செயலா் ம. சந்திரசேகா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் இரா. காமராசு, ஜீவானந்தம் படத்திற்கு மாலை அணிவித்து பேசினாா்.

இதில், சிபிஐ நகரச் செயலா் வி. கலைச்செல்வன், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன், ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அமைப்பின் கிளைச் செயலா் க. தங்கபாபு வரவேற்றாா். மாவட்ட நிா்வாகி அ. முரளி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT