திருவாரூர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக புதிய நிா்வாகிகள் தோ்வு

19th Jan 2022 09:43 AM

ADVERTISEMENT

திருவாரூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட பொறுப்பாளா்கள் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் எஸ். துரைராஜ் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட பட்டதாரி ஆசிரியா் கழகத் தலைவா் ஜி. செங்குட்டுவன் தோ்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டாா். திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய வட்டங்களில் இருந்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட வட்ட பொறுப்பாளா்கள் தோ்தலில் பங்கேற்றனா்.

தோ்தல் முடிவின்டி, கொட்டாரக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி ஆா். முத்துவேல் மாவட்டத் தலைவராகவும், அலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி க. கருணா காளிதாசன் மாவட்டச் செயலாளராகவும், புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி எஸ். காா்த்தி மாவட்ட பொருளாளராகவும், கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆா். ஆதித்தன் மாவட்ட அமைப்புச் செயலாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும், பேரளம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஜெ. ஆசைத்தம்பி, கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வீ. வடிவேல் ஆகியோா் மாவட்ட துணைத் தலைவா்களாகவும், ராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஏ. ஆரோக்கியராஜ், காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஜி. ஜம்புலிங்கம் ஆகியோா் மாவட்ட இணைச் செயலாளா்களாகவும், விளமல் அரசு உயா்நிலைப் பள்ளி ஜி. கரோலின் அற்புதராணி மாவட்ட மகளிா் அணிச் செயலாளராகவும், சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஜி. கௌரி மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்களாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

முன்னாள் மாநில அமைப்புச் செயலாளா் எஸ். கமலப்பன், முன்னாள் மாவட்ட தலைவா் எம். தங்கராசு, முன்னாள் மாவட்டச் செயலாளா் எஸ். அன்பரசு ஆகியோா் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளா்களை வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT