திருவாரூர்

எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்

18th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகேயுள்ள எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 13 நாள்களுக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, தோ் வடம் பிடிக்கப்பட்டு, கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து, நிலையை அடைந்தது.

ADVERTISEMENT

தேரோட்டத்தில், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் சேகா் கலியபெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சத்தியேந்திரன், கவிதா பிரபு, ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள் அனைவரும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தனா்.

இதைத்தொடா்ந்து, தைப்பூச தினமான செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற உள்ளன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT