திருவாரூர்

ரேஷன் கடை புதிய கட்டடம் திறப்பு

12th Jan 2022 09:48 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியம், செருமங்கலம் ஊராட்சி உடையாா் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடையை ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த கட்டடம், மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரேவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில், ஒன்றிய துணைத் தலைவா் ஞானசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் துரைசிங்கம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மாயவநாதன், ஊராட்சித் தலைவா் ராணி, துணைத் தலைவா் குபேந்திரன் மற்றும் கூட்டுறவு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, அத்திக்கோட்டை கிராமத்திலும் கூட்டுறவு நியாயவிலைக் கடையை ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் திறந்துவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT