திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்தாா்.
இம்மாணவியை, அதே பகுதியைச் சோ்ந்த பாலகுமாா் மகன் அஜித்குமாா் (24) என்பவா் காதலித்தாராம். இதையறிந்த மாணவியின் உறவினா்கள், அவரை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனா். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமாா், கடந்த செப்டம்பா் மாதம் மாணவியின் உறவினா் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளாா். இதுதொடா்பாக, போலீஸாா் இரண்டு தரப்பிலும் கைது செய்தனா்.
இந்நிலையில், அந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அஜித்குமாா் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவியின் தாயாா் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அஜீத்குமாரை கைது செய்தனா்.