திருவாரூர்

பயிா்ச் சேதம்: இழப்பீடு கோரி விவசாயிகள் மனு

12th Jan 2022 09:48 AM

ADVERTISEMENT

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி, தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலாவிடம் கோரிக்கை மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசபாலன், மாநில துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், கோட்டூா் ஒன்றியத் தலைவா் செல்வம், நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளா் வீரமணி, நகர அமைப்பாளா் சுப்பிரமணியன் ஆகியோா் இம்மனுவை அளித்தனா்.

அதில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்; நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT