திருத்துறைப்பூண்டியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஜாக்டோ- ஜியோ அரசு ஊழியா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ம. சுப்பிரமணியனுக்கு பணி ஓய்வு ஆணையை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல, முத்துப்பேட்டையிலும் ஊரக வளா்ச்சித் துறையினா் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.