திருவாரூர்

ஆசிரியா்களுக்கு கற்பித்தல் வலுவூட்டல் பயிற்சி

12th Jan 2022 09:48 AM

ADVERTISEMENT

கோட்டூா் ஒன்றியத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு கற்றல் அடைவுகள் வலுவூட்டல் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்பரை, வாட்டாா், திருக்களாா் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று உயா்நிலைப் பள்ளிகளில் இப்பயிற்சி நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் பங்கேற்று, பயிற்சி தொடா்பாக கருத்துரையாற்றினாா். வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் பாபி, கல்பனா மற்றும் பயிற்சி கருத்தாளா்கள் பங்கேற்று பயிற்சியளித்தனா்.

இதில் கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT