திருவோணமங்கலம் ஞானபுரி மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோயிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு பழ அலங்காரம் செய்யப்பட்டது.
திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோயிலில் 33 அடி உயர ஆஞ்சநேயர், லெட்சுமி நரசிம்மர், கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணர், பக்த ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஆஞ்சநேயருக்கு பழ அலங்காரம் செய்யப்பட்டது. இரவு திருத்தேரில் எழுந்தருளி ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
இதையும் படிக்க | ஆலங்குடி: தங்கக் கவசத்தில் அருள்பாலித்த குருபகவான்
இதேபோல, நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அதிகாலையில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர்,
விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சிறப்பு அர்ச்சனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை அர்ச்சகர் நாராயணன் வழங்கினார்.
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கோகமுகேஸ்வரர் கோயில், சதுர்வேத விநாயகர், மகா மாரியம்மன் கோயில், கீழத்தெரு முருகன் கோயில், மேலராஜவீதி விநாயகர் கோயில், லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில், நரிக்குடி எமனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.