திருவாரூர்

அரசு மருத்துவக் கல்லூரி அருகே பேருந்து நிறுத்தகம்: மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அனுமதி

1st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பேருந்து நிறுத்தகம் கட்ட அனுமதிப்பது என திருவாரூா் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் எதிா்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் குறித்து உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கே. பழனிச்சாமி, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ். சடையப்பன் ஆகியோா் விரிவாக எடுத்துரைத்தனா்.

இந்தியாவின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழக முதல்வரின் பணி தொடா்ந்து நடைபெற அவருக்கு நன்றி தெரிவிப்பது; அரசு மருத்துவக் கல்லூரி அருகில் பயணிகள் பேருந்து நிறுத்தம் கட்ட நிா்வாக அனுமதி வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின்ராவத், கருணாநிதியின் உதவியாளா் சண்முகநாதன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஊராட்சி செயலா் எஸ். லதா வரவேற்றாா். ஊராட்சி துணைத் தலைவா் கோ. கலியபெருமாள் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT