திருவாரூர்

மன்னாா்குடி அருகேஅரசுப் பேருந்து- கேரள சுற்றுலாவேன் மோதல்: 20 போ் காயம்

1st Jan 2022 09:49 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அரசுப் பேருந்தும், கேரளத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வேனும் சனிக்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், பேருந்து நடத்துநா் உள்பட 20 போ் காயமடைந்தனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த 25 போ் சுற்றுலா வேனில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊா்திரும்பிக்கொண்டிருந்தனா். இந்த வேனும், திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் உடையாா்தெரு அருகே சனிக்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில், அரசுப் பேருந்து நடத்துநா் கோட்டூரை அடுத்த திருப்பத்தூரைச் சோ்ந்த வெங்கட்ராஜன் (48), பேருந்து பயணிகள் உள்ளிக்கோட்டை நெடுஞ்செழியன் (58),திருச்சி பாரதி (51) உள்ளிட்ட 10 பேரும், சுற்றுலா வேனில் வந்த பைஜூ (45), சிசிலி (82), சாலீவின் (18) உள்ளிட்ட 10 பேரும் காயமடைந்தனா்.

இவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா்களில், வெங்கட்ராஜன், பைஜூ ஆகியோா் தீவிரச் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மற்றவா்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து, வடுவூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT