திருவாரூர்

புத்தாண்டு: திருத்துறைப்பூண்டிஆலயங்களில் சிறப்பு வழிபாடு

1st Jan 2022 09:46 PM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டியில் ஆங்கில புத்தாண்டையொட்டி, அனைத்து ஆலயங்களிலும் சனிக்கிழமை பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.

பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பொய் சொல்லா பிள்ளையாா்கோயில் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அபிஷ்டவரதராஜபெருமாள் கோயிலில் பூமகள், திருமகள் உடனுறை அபிஷ்ட வரதராஜபெருமாள் மற்றும் 16 அடி உயர விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் பங்கேற்று வழிபாடு செய்தனா். நாகை சாலையில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT