திருவாரூர்

திருவாரூரில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

1st Jan 2022 09:48 PM

ADVERTISEMENT

புத்தாண்டு பிறப்பையொட்டி, திருவாரூரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும் நடைபெற்றன.

திருவாரூா் கீழவீதியில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவா் கோயிலில் திருப்புகழ் திருப்படி பூஜை நடைபெற்றது. திருப்படிகளில் பூஜை செய்யப்பட்ட விளக்குகளை, பெண்கள் எடுத்து ஆலய வலம் வந்து விநாயகா் சந்நிதியில் செலுத்தினா். இதைத்தொடா்ந்து, அருள்மிகு பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT