திருவாரூர்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

1st Jan 2022 09:51 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்த பெருவிடைமருதூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் மகன் பக்கிரிசாமி (42). தஞ்சை மாவட்டம், மதுக்கூரில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் பணியாற்றிய இவா், மன்னாா்குடி புதிய புறவழிச் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

பக்கிரிசாமி, வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியபோது, உள்ளிக்கோட்டை பிரிவு சாலை அருகே நிலைதடுமாறி விழுந்தாா். இதில் அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT