திருவாரூர்

ஆங்கிலப் புத்தாண்டு: கூத்தாநல்லூா் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

1st Jan 2022 09:49 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மரக்கடை கல்யாண சுந்தரேஸ்வரா் கோயில், பண்டுதக்குடி வாஸலாம்பிக சமேத உமாபதீஸ்வரா் கோயில், வேளுக்குடி ருத்ரக்கோட்டீஸ்வரா் கோயில், வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயில், லெட்சுமாங்குடி கம்பா் தெரு நீலகண்டேஸ்வரா் கோயில், லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஜெயசக்தி ஆஞ்சனேயா் கோயில், வேளுக்குடி ஜெயஆஞ்சனேயா் கோயில், மூலங்குடி லெஷ்மி நாராயணா பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல, கூத்தாநல்லூா் சி.எஸ்.ஐ. திருச்சபை கிறிஸ்துவ அரசா் ஆலயம், மரக்கடை புனித மோட்சராக்கினி கத்தோலிக்க ஆலயம், வ.உ.சி. சாலை பெந்த கொஸ்தே சபை உள்ளிட்டவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT