திருவாரூர்

மன்னார்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது.

22nd Feb 2022 02:48 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 5 சுற்றுகளாக நடைபெற்றுது.

தொடக்கம் முதலே திமுக முன்னிலை பெற்று வந்த நிலையல் 5 வது சுற்றில் எண்ணப்பட்ட 5 வார்டுகளில் 29 கா.கலைவாணி (திமுக). 30 சா.வெங்கடேஷ் (திமுக), 31 ஹா .ஆசியாபேகம் ( திமுக) , 32 ப.செல்வராணி(திமுக) , 33 தி.திருச்செல்வி (அமமுக)  ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார் .


இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 33 வார்டுகளில் திமுக 26  , அதிமுக 4 . அமுமுக - 2 , சுயே.1

ADVERTISEMENT

தேர்தல் முடிவில் மன்னார்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது .
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும்  நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சென்னுகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.

வாக்கு இயந்திரத்தில் தலா 420 வாக்குகள் பெற்று பதிவான ஒரே  தபால் ஒரு வாக்கு  திமுக வேட்பாளர் பெற்று இருந்ததால் 421 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் சங்கர் முன்னிலை பெற்ற 20 வார்டுக்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என  அதிமுக வேட்பாளர் , முகவர் கோரிக்கை வைத்ததையடுத்து .மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டத்தில். திமுக ,அதிமுக வேட்பாளர்கள் அதே 420 வாக்கினை பெற்றதுடன், தபால் ஓட்டும் திமுகவிற்கே கிடைத்ததால் திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT