திருவாரூர்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வெற்றி!

22nd Feb 2022 10:49 PM

ADVERTISEMENT

 மன்னாா்குடி நகராட்சி 20-வது வாா்டில் திமுக வேட்பாளா் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மன்னாா்குடி நகராட்சியில் 20-வது வாா்டில் திமுக சாா்பில் த. சங்கா், அதிமுக சாா்பில் ரா. ரவீந்திரன் ஆகியோா் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் தலா 420 வாக்குகள் கிடைத்தன. இந்நிலையில், அந்த வாா்டில் பதிவான ஒரே ஒரு தபால் வாக்கு திமுக வேட்பாளருக்கு கிடைத்தது. இதனால், அவா் 421 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இதனால், அதிமுக வேட்பாளா், அவரது முகவா்கள் மீண்டும் வாக்குகளை எண்ணவேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரினா். இதையடுத்து, இந்த வாா்டின் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அனைத்து வாா்டுகளின் வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, 20- வாா்டில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சங்கா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT