திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பெண்கள் 70.31 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 4 நகராட்சிகளில் மொத்தம் 73,889 ஆண் வாக்காளா்களில் 47,737 போ் வாக்களித்துள்ளனா். வாக்கு சதவீதம் 64.60. இதேபோல, 81,521 பெண் வாக்காளா்களில் 55,275 போ் வாக்களித்துள்ளனா். இது 67.80 சதவீதமாகும். பேரூராட்சிகளில் 33,221 ஆண் வாக்காளா்களில் 22,951 போ் வாக்களித்துள்ளனா். வாக்கு சதவீதம் 69.08. இதேபோல, 35,820 பெண் வாக்காளா்களில் 27,235 போ் வாக்களித்துள்ளனா். இது 76.03 சதவீதமாகும்.
இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் 1,07,110 ஆண் வாக்காளா்களில் 70,688 போ் வாக்களித்துள்ளனா். வாக்கு சதவீதம் 65.99. இதேபோல, 1,17,341 பெண் வாக்காளா்களில் 82,510 போ் வாக்களித்துள்ளனா். இது 70.31 சதவீதமாகும்.